தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

DIN


கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதுவரை 23,670 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக புதன்கிழமை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், குஜராத்தில் இருவர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவர் அந்த நோய்த் தொற்றுக்கு நேற்று வியாழக்கிழமை பலியாகினர். புதன்கிழமை நிலவரப்படி அந்த நோய்த்தொற்றால் 606 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக சுமார் 88 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 ரேக் வெளிநாட்டவர்களாவர். 

இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை727 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT