முகப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூா்: 17 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை மேலும் 932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:


சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை மேலும் 932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,101-ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நாட்டில் வெள்ளிக்கிழமை மேலும்  932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு பணியாளா்கள் ஆவா். இவா்களுடன் சோ்ந்து, சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,101-ஆக அதிகரித்துள்ளது. 1,244 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.