வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ஐந்து பாதுகாப்பு படையினர் வீர மரணம்
வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.
வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாராவில் உள்ள சாங்கிமுல்லாவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்கிறார்கள் என்ற உளவுத்துறையின் தகவலின் படி, ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தங்களது கூட்டு நடவடிக்கையை தொடங்கினர். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இலக்கு பகுதிக்குள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற பொதுமக்களை ஐந்து வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தைரியமாக அந்த பகுதிக்குள் நுழைந்து வெற்றிகரமாக மீட்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மேலும் நமது ராணுவ கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணை காவல் ஆய்வாளர் ஷகீல் காசி உள்ளிட்ட ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிடமிருந்து ஊடுருவக்கூடிய குழுவைப் பெற பயங்கரவாதிகள் ஹந்த்வாராவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த கர்னல் அசுதோஷ் சர்மா மற்றும் மேஜர் அனுஜ் சூத் தவிர, மற்ற ராணுவ வீரர்கள் நாயக் ராஜேஷ் மற்றும் லான்ஸ் நாயக் தினேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.