முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஷ்யா: ஒரே நாளில் 10,633 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,633 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளதை அடுத்து, அதன் மொத்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,34,687 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
கரோனா பாதிப்பு'
பகிர்:

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,633 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளதை அடுத்து, அதன் மொத்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,34,687 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாஸ்கோவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,948 பேருக்கு பாதிப்பு உறுதி செய்ததை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 68,606 -ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை 58 பேர் பலியானதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் 16,639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாஸ்கோவின் மொத்த குடியிருப்பாளர்களில் சுமார் 2 சதவீதம் பேர் - ஜனவரி மாதத்தில் 12.68 மில்லியன் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் தொற்றுநோய் பாதிப்பு சீராகிவிட்டதாக கருதி பாதுகாப்பு விதிகளை தளர்த்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →