முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று
முதல்வர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய செய்திகள்முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று
முதல்வர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: முதல்வர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் விஐபி வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்று உள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய காவலர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.