தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பலி 3 லட்சத்தை நெருங்குகிறது

DIN


நியூயார்க்: உலக அளவில் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை  2,92,893 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (சிஎஸ்எஸ்இ) தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 180 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இதுவரை 43,42,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 46,342 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,92,893 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16, 02,441 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். 

தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்க தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 14,08,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 83,425 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட பிற நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மருத்துவப் பல்கலை. நாள்தோறும் மருத்துவப் பரிசோதனை வசதி

SCROLL FOR NEXT