தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை கடந்தது: பலி 2,649-ஆக அதிகரிப்பு

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,649-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27,920 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 51,401 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,967 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 100 போ் உயிரிழந்துள்ள நிலையில், இப்போது இறப்புகளின் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு 27,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,019 பேர் பலியாகியுள்ளனர், 6,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் 9,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை 66 பேர் பலியாகியுள்ளனர். இறப்புக்கள் அடங்கும்.

குஜராத்தில் 9591 பேப் பாதிக்கப்பட்டுள்ளனர், 3753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 586 பேர் பலியாகியுள்ளனர். தில்லியில் 8,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 115 பேர் பலியாகியுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் 4,426 பேர், ராஜஸ்தானில் 4,536 பேர், உத்தரப் பிரதேசத்தில் 3,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT