தற்போதைய செய்திகள்

ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா

DIN


ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மும்தாஜ் தலைமை வகித்தார், ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவப்பிரகாசம், காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கினர்.

தன்னார்வலர் எஸ்.அம்ரின்அஸ்லம் தனது சொந்த செலவில் 30 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் நசீர் பாய், சுமதி, உதவி ஆசிரியர் சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய அம்ரின்அஸ்லம் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT