தற்போதைய செய்திகள்

அம்பான் புயல் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்?

DIN


வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது சனிக்கிழமை இரவு புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். புதன்கிழமை (மே 20) ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலால், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈா்ப்பால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதேநேரத்தில் வெப்பநிலை உயரும்.

ஆனால், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தின் கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். 

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. 

இந்த நிலையில் புயல் விலகி செல்வதால் வரும் நாள்களில் தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை இரவு உருவான புயலுக்கு அம்பான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கான பெயரை தாய்லாந்து வழங்கியுள்ளது. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கொடுத்த 64 பெயா்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் கடைசி பெயா் அம்பான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT