தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு 46 லட்சத்தைக் கடந்தது: பலி 3,08,676 

DIN

வாஷிங்டன்:  உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 46,29,407 -ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,08,876 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, மொத்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 46,29,407 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,08,676 ஆகவும் அதிகரித்துள்ளது என்று பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை 14,84,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 88,507 பேர் உயிரிழந்துள்ளனர்    . அதே நேரத்தில் 3,27,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தொற்று பாதிப்பை பொறுத்தவரை ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,62,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2,38,004 பேர், ஸ்பெயினில் 2,30,183 பேர், இத்தாலியில் 2,23,885 பேர், பிரேசில் 218,223 பேர், பிரான்சில் 1,79,630 பேர், ஜெர்மனியில் 1,75,233 பேர், துருக்கியில் 1,46,457 மற்றும் ஈரானில் 1,16,635 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், உலகளவில் தொற்று பலி எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை அதிகபட்சமாக 33,998 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடங்களில் இத்தாலியில் 31,610 பேர், பிரான்சில் 27,532 பேர், ஸ்பெயினில் 27,459, மற்றும் பிரேசில் 14,817 பேர் பலியாகியுள்ளனர். 

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அந்த நோய்க்கு இதுவரை 82,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,633 போ் உயிரிழந்ததாகவும், 78,219 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT