முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது

 உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,720,077 -ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

நியூயார்க்:  உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,720,077 -ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 18,11,658 பேர் குணமடைந்து வீடு திரு்பியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மொத்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 47,20,077 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆகவும் அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 25,95,203-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44,828 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  என்று பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை 15,07,773    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90,113 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 3,39,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதிகம் தொற்று பாதித்த நாடுகள் விவரம்:  ஸ்பெயின் 2,76,505 பேர், ரஷ்யா 2,72,043 பேர், இங்கிலாந்தில் 240,161    பேர், இத்தாலியில் 2,24,760 பேர், பிரேசில் 2,33,511 பேர், பிரான்சில் 1,79,365 பேர், ஜெர்மனியில் 1,76,247 பேர், துருக்கியில் 1,48,067 மற்றும் ஈரானில் 1,18,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், உலகளவில் தொற்று பலி எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை அதிகபட்சமாக 34,466 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடங்களில் இத்தாலியில் 31,763 பேர், பிரான்சில் 27,625 பேர், ஸ்பெயினில் 27,563 மற்றும் பிரேசில் 15,662 பேர் பலியாகியுள்ளனர். 

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அந்த நோய்க்கு இதுவரை 82,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,633    போ் உயிரிழந்ததாகவும், 78,227 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.