தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15,70,583; பலி 93,533  

DIN

 
அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,70,583 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93,533 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு வளா்ந்த நாடுகள் கடுமையாக பாதித்துள்ளது. வல்லரசான அமெரிக்கா தொற்று பாதிப்பு மற்றும் பலிக்கும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கரோனாவுக்கு ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது. எனினும், சில நாடுகளில் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வந்தன. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற ஒருசில நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கவே, உலக உயிரிழப்பு விகிதம், ஆரம்ப கட்டத்தைவிட அதிகரித்து தற்போது 8 முதல் 9 சதவீதம் வரை காணப்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,70,583 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93,533 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3, 61,180 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,86,332 லட்சமாக உயர்ந்துள்ளது, தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 19,58,496 ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 93,533 ஆக உயர்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT