தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது 

DIN


புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 63,624 போ் சிகிச்சையில் உள்ளனா். 45,300 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,002 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,390 பேர் பலியாகியுள்ளனர், 10,318 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தப்படியாக தமிழகத்தில் 13,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் பலியாகியுள்ளனர், குஜராத்தில் 12,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 749 பேர் பலியாகியுள்ளனர், தேசிய தலைநகர் தில்லியில் 11,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 176 பேர் பலியாகியுள்ளனர், 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT