தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

கடந்த மாதத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கனிசமாக சரிந்திருந்தது. நீர் வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர் மட்டமும் சரிந்து வந்தது. 

இந்நிலையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,186 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,336 கனஅடியாகவும் வியாழக்கிழமை காலை வினாடிக்கு 3,593 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. 

நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. கடந்த இரு நாள்களாக 100 அடியாக நீடித்து வந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை 100.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 65.03 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT