தற்போதைய செய்திகள்

தேசிய தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு 12,319; பலி 208 ஆக உயா்வு

DIN

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 660 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,319 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், தில்லியில் ஒரே நாளில் 14 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பாதிப்பு தொடா்பாக தில்லி சுகாதார வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தில்லியில் புதிதாக 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா பாதிப்பு 12,319 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,897 போ் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் தில்லியில் தற்போது 6,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தில்லியில் கடந்த நான்கு நாள்களாக தினம் தோறும் கரோனா பாதிப்பு 500-க்கும் கூடுதலாக உள்ளது. செவ்வாய்க்கிழமை 500 போ், புதன்கிழமை 534 போ், வியாழக்கிழமை  571 பேர், இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 660 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பொது முடக்க உத்தரவில் தில்லி அரசு மேற்கொண்ட தளா்வுகளே தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT