தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: அனுமதி வழங்கிட  தமிழக அரசுக்கு ஜமாஅத் கூட்டமைப்பு  கோரிக்கை

DIN


சீர்காழி: ரமலான் நோன்பு  இந்தியா முழுவதும் கடந்த மாதம்  25 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில் ரமலானை நிறைவுச்செய்யும் இஸ்லாமியர்கள் ஈதுல் பித்ரு  என்னும் ஈத் பெருநாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகளினால்  பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெறாமல் அனைத்து வாழிபாட்டு தளங்களையும் அரசு தனது கட்டுபாட்டிற்குள் வைத்துள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை பண்டிகை காலங்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டியுள்ளதால், ரம்ஜான் பண்டிகைக்கான ஈத் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களில் நடத்திட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்  பி. நாயர்  பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திட   அனுமதி வழங்குமாறு சீர்காழி வட்டார அனைத்து சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளார் முஹம்மது யூசுப்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT