தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,31,868; பலி 3,867-ஆக அதிகரிப்பு

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,767 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 147 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,867-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 73,560 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 54,440 போ் குணமடைந்துள்ளனா். 

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 47,190 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 15,512 பேர், குஜராத்தில் 13,664, தேசிய தலைநகர் தில்லியில் 12,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT