மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரின் செயல்பட்டால்
தற்போதைய செய்திகள்மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரின் செயல்பட்டால்
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரின் செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்டாம் உற்பத்தியாகிறது.
நேற்று புதன்கிழமை இரவு மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அப்போது மின்னல் இரண்டாவது பிரிவில் நிலக்கரி கையாளும் பகுதியில் தாக்கியது. இதனால் நிலக்கரியில் தீப்பற்றிது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படையினர் உடன் விரைந்து சென்று சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.