தில்லியில் இருந்து வூஹானுக்கு சென்ற விமானத்தில் 19 பேருக்கு கரோனா
தில்லியில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி வூஹானுக்கு சென்ற விமானத்தில் பயணித்த 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக திங்கள்கிழமை ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி வூஹானுக்கு சென்ற விமானத்தில் பயணித்த 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக திங்கள்கிழமை ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் வூஹானுக்கு சென்ற பயணிகளில் 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வூஹான் விமான நிலையத்தில் செய்த சோதனையில் தொற்று உறுதியானது.இதையடுத்து அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர். தில்லியில் செய்த பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான பிறகே பயணம் மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தில்லி-வூஹான் வழித்தடத்தில் இயக்கப்பட்ட முதல் விமானமாகும்.