தற்போதைய செய்திகள்

'ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய நடவடிக்கை' : முதல்வர்

DIN

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேசுகையில்,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி குறித்து பல்வேறு புகார்கள்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் விளையாட்டை நடத்துவோர் குற்றவாளிகளாக கருதப்படுவார். ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறது என கூறினார்.

மேலும், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 7 பேர் விடுதலையில் திமுகவிற்கு எந்த அக்கறையும் இல்லை, அதிமுக அரசுதான் தீர்மானம் நிறைவேற்றியது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, 144 தடை நடைமுறையில் உள்ளதால் வேல் யாத்திரைக்கு சட்டப்படி அனுமதி வழங்க இயலாது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT