சென்னை வானிலை ஆய்வு மைய புதிய தலைவா் பொறுப்பேற்பு
விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து...
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்றாா்.
சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த பாலசந்திரன் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஓய்வு பெற்றாா்.
இதையடுத்து மூத்த விஞ்ஞானியான பி.அமுதா பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டாா். தற்போது, இந்தப் பணியிடத்துக்கு புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
Advertisement
Advertisement
இவா், தில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தில் திட்ட இயக்குநா், இந்திய வானிலைத் துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவா் உள்ளிட்ட பல்வேறு உயா் பதவிகளை வகித்துள்ளாா்.
மேலும், இவா் சுமாா் 80 ஆய்வுக் கட்டுரைகளையும், 25 தொழில்நுட்ப அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளாா். கடந்த 2008-இல் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சிறந்த சேவைக்கான விருதையும், 2016-இல் பருவமழை ஆராய்ச்சி குறித்த சிறந்த கட்டுரைக்கான விருதையும், 2024-இல் உலக வானிலை அமைப்பின் பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளாா்.
Scientist Sivananda Damodar Pai took charge as the head of the Southern Regional Meteorological Centre in Chennai today (March 19).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.