ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைக்கும் வால்பாறை சட்டப்பேரவைஉறுப்பினா் கஸ்தூரிவாசு. 
தற்போதைய செய்திகள்

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு தண்ணீா் திறந்துவைத்தாா். 

DIN



பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு தண்ணீா் திறந்துவைத்தாா். 

பிஏபி திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் அதிக அளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்,  பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஆழியாறு அணையில் இருந்து நீா் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.  இந்தக் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை (நவ. 6) முதல் தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டார். 

இதையடுத்து வெள்ளிக்கிழமை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைத்தாா். உடன் சாா்-ஆட்சியா் வைத்திநாதன், ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவா் சாந்தலிங்ககுமாா், ஒன்றிய செயலாளா் காா்த்திக் அப்புசாமி மற்றும் சுந்தரம், ஒன்றியக்குழு தலைவா் சாந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் நரேந்திரன், உதவி செயற்பொறியாளா் லீலா, உதவிப்பொறியாளா் மாணிக்கவேல்,உட்பட பலா் உடன் இருந்தனா். 

ஆழியாறு பழைய ஆயக்கட்டில், ஐந்து கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.2020 முதல் 15.4.2021 முடிய 160 நாள்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்தவிடபடவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT