தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு நீா் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாகக் குறைப்பு

DIN


மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலையில் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மழையின்  காரணமாக வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5972 கன அடியிலிருந்து 6861 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 95.63 அடியாக சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.32டி எம் சி யாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 96.32 அடியாக இருந்தது. மழை அளவு 17.20 மி.மீ இருந்தது. 

தற்போது டெல்டா பாசனப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்துள்ளது. இதனால், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக உடனடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த பிறகு வாக்காளா்கள் பத்திரமாக வீடு திரும்ப இலவச இரு சக்கர வாகன சேவை: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

SCROLL FOR NEXT