விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் . 
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பணிநிரந்தரம், ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN


விழுப்புரத்தில் பணிநிரந்தரம், ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் தமிழ்நாடு வாணிப கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ தலைவர் முத்துக்குமரன், பணியாளர் சங்கம் கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், பாட்டாளி தொழிற்சங்கம் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு 30 சதவீத ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி என மாற்ற வேண்டும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT