தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: முதல்வர்

ANI

பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க நேரம் அறிவித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

“தீபாவளி மற்றும் குருநானக் ஜெயந்தி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவம்பர் 10 முதல் டிசம்பர் 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளான நவம்பர் 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், குருநானக் ஜெயந்தியான நவம்பர் 30ஆம் தேதி காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, இரவு 11.55 மணி முதல் அதிகலை 12.30 மணி வரை வெடிக்கலாம்.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT