முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் 72 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரோனா

ஹரியாணாவில் 12 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
கோப்புபடம்
பகிர்:

ஹரியாணாவில் 12 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்குப் பின் பள்ளிகளுக்கு திரும்பிய மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ரேவாரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு பள்ளிகளில் உள்ள மொத்தம் 837 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறைந்த அளவில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை 3 நாள்களும், அதிகளவில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை 14 நாள்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோடல் அதிகாரி டாக்டர் விஜய் பிரகாஷ் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் குண்டு அருகிலுள்ள பட்லா கிராமத்தில் வசிப்பவர்கள். அந்த கிராமம் முழுவதும் கிருமிநாசினி  கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சோதனை செய்யப்படவுள்ளது.

பண்டிக்கை காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்கள். இதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்தப்படும்.” என தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →