தற்போதைய செய்திகள்

தில்லியில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.2 ஆயிரம் அபராதம்: கேஜரிவால்

ANI

தில்லியில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு 3-ம் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், 3-ம் அலையின் உச்சத்தைக் கரோனா கடந்துவிட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாவில்லை என்றால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT