கேரளத்தில் மேலும் 5,722 பேருக்கு கரோனா பாதிப்பு
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,722 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,722 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 5,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 5,45,642 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1969 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 6,860 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,75,320 ஆக உள்ளது. தற்போது 68,229 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.