காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட காவலருக்கு பதவி உயர்வு
தில்லியில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டதற்காக தில்லி காவலர் சீமா டாக்காவுக்கு உதவி துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
தில்லியில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டதற்காக தில்லி காவலர் சீமா டாக்காவுக்கு உதவி துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
தில்லி காவல்துறையில் ஜூலை 6, 2006ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தவர் சீமா டாக்கா. பின், தென்கிழக்கு தில்லி காவல் பகுதியில் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் 56 குழந்தைகள் 14 வயதிற்கும் குறைவானவர்கள். கண்டுபிக்கப்பட்டதில் பெரும்பான்மையான குழந்தைகள் கடந்த 12 மாதத்திற்குள் காணாமல் போனவர்கள்.
இதற்காக சீமா டாக்காவிற்கு காவல் உதவி துணை ஆய்வாளராக பணி உயர்வு அளித்து தில்லி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சீமா கூறுகையில்,
“நான் தடைகளின்றி தொடர்ந்து பணியாற்றுவேன். இப்பணிகளை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த குழந்தைகளை தில்லியில் இருந்து மட்டுமல்லாமல் மேற்குவங்கம், பஞ்சாப், பிகார் போன்ற மாநிலங்களில் இருந்து மீட்டுள்ளோம்.
மேற்குவங்கத்தில் 2018ஆம் ஆண்டு காணாமல் போன சிறுவன் தற்போது கிடைந்துள்ளான். இதுபோன்ற பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு இந்தக் குழந்தைகளை கண்டுபிடித்துள்ளோம்” என தெரிவித்தார்.