முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,688 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,688 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,66,677 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 489 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய அறிவிப்பில் மேலும் 18 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,568 பேர் பலியாகியுள்ளனர்.  

மேலும் 2,173 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,41,705 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 13,404 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →