முகப்பு
தற்போதைய செய்திகள்

மரக்காணத்தில் புயல் முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட முட்டுக்காடு மக்கள்

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
மரக்காணம் அருகே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்த முட்டுக்காடு கிராம மக்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலோரப் பகுதியான அழகன் குப்பம் கடற்கரைக்குச் சென்ற ஆட்சியர், அங்கு மீனவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மரக்காணம் அருகே அழகன் குப்பம் கடற்கரையில் மீனவர்களிடையே கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

புயல் முன்னெச்சரிக்கையாக படகுகள் பத்திரமாக நிறுத்தி வைப்பது குறித்தும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுரை வழங்கினார்.

Advertisement

அங்குள்ள புயல் பாதுகாப்பு மையத்தின் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தார்.

இதனை அடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள முட்டுக்காடு பகுதிக்கு ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரை, அப்பகுதி மக்கள் வழிமறித்து குறைகளை தெரிவித்தனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்தும் நிறைவேறவில்லை, பக்கிங்காம் கால்வாயில் இருந்து, வரும் மழைநீரால் மழைக்காலங்களில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

இதனை அடுத்து அந்த கிராமத்திற்கு உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து வந்தார.
இதனையடுத்து கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் கடற்கரைப்பகுதியில் மீனவர் பகுதிகளையும் புயல் பாதுகாப்பு மையங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அங்கு அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

புயல் தடுப்பு பணிகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும், பாதுகாப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments