கடலூருக்கு ஆயிரம் மின்ஊழியர்கள் வருகை: ககன்தீப் சிங்
கடலூரில் நிவர் புயலால் மின் கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாக சரி செய்யும் வகையில் ஆயிரம் மின்ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கடலூரில் நிவர் புயலால் மின் கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாக சரி செய்யும் வகையில் ஆயிரம் மின்ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்திட நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விவசாயிகள் முன்னதாகவே தங்களது பயிர்களை காப்பீடு செய்துக் கொண்டால் இயற்கை இடர்பாட்டிலிருந்து நஷ்டமடையாமல தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கடலூர் மாவட்டத்தில் புயலால் மின் கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாக சரி செய்யும் வகையில் ஈரோடு, கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஆயிரம் மின்ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்டத்தில் 2 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.