தற்போதைய செய்திகள்

‘விவசாயிகளின் பேரணியை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

ANI


வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா வழியாக தில்லி அடைந்து போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்த நிலையில், ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் தடுப்புகள் மூலம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹரியாணா அரசின் இச்செயலிற்கு கண்டனம் தெரிவித்து பஞ்சாப் முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

தில்லிக்கு அணிவகுத்துச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் ஹரியாணா அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனோகர் லால் கட்டாரின் அரசு விவசாயிகளை தடுத்து நிறுத்தியது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT