ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி கிராம சபை கூட்டம்
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தி.மு.க. தலைமையில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தி.மு.க. தலைமையில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மரக்குளம் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வாசுதேவன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் ஊராட்சிகளுக்கு கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊராட்சிகளில் நடைபெறும் டெண்டர் பேக்கேஜ் முறையை கைவிட வேண்டும். 2018 -19 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.