மகாராஷ்டிரத்தில் 15 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 12,134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 12,134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 12,134 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 15,06,018 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 302 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 39,732 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 17,323 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 12,29,339 ஆக உள்ளது. தற்போது 2,36,491 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.