ஹிமாச்சலில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஹிமாச்சல பிரதேசத்தின் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது சிம்லா மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.