தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,185 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,288 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 68 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,91,811 பேர் குணமடைந்துள்ளனர். 44,197 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 97,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 81,41,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 124 என மொத்தம் 190 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.