கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் சரக்கு ரயில்கள் செல்ல போராட்டக்காரர்கள் அனுமதி

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சரக்கு ரயில்கள் செல்ல போரட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர

ANI

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சரக்கு ரயில்கள் செல்ல போரட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் மத்திய அரசால் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தொடர் ரயில் மறியல், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாநிலத்தில் அத்தியவசிய தேவைக்கான பொருள்கள் பிற பகுதிகளில் இருந்து வர தடை ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில் சேவைக்கு அனுமதி அளித்து ரயில் மறியல் போராட்டதை கைவிடுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்த நிலையில், சரக்கு ரயில்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT