பிகாரில் எருமை மீது அமர்ந்து பிரசாரம் செய்த வேட்பாளர் கைது
பிகார் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்ய எருமை மீது அமர்ந்து வந்த வேட்பாளரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவிட்டனர்.
பிகார் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்ய எருமை மீது அமர்ந்து வந்த வேட்பாளரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவிட்டனர்.
பிகார் தேர்தலில் கயா நகர தொகுதியில் ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பர்வேஸ் ஆலம் என்றும் அழைக்கப்படும் மன்சூரி.
இவர் வேட்பாளர்களை கவர்வதற்காக எருமை மீது ஏறி பிரசாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது விலங்குகளுக்கு கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கரோனா விதிமுறைகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.
இதுகுறித்து மன்சூரி கூறுகையில், என்னிடம் பிரசாரத்திற்கு செல்ல சொந்தமாக கார் இல்லை, ஒரு எருமை மட்டுமே உள்ளது. என்னால் வாடகைக்கு கார் எடுக்க முடியாததால் என்னிடம் உள்ள எருமை மீது ஏறி பிரசாரத்திற்கு வந்தேன் என தெரிவித்தார்.