முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் மனைவி மற்றும் 3 மகள்களை கொன்றுவிட்டு கணவர் தப்பியோட்டம்

குஜராத்தில் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களை புதன்கிழமை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
கோப்புப்படம்
பகிர்:

குஜராத்தில் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களை புதன்கிழமை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மந்த்வி தெஹ்ஸில் உள்ள ஜக்கானியா கிராமத்தில் சிவ்ஜி (வயது 35) என்பவர் மனைவி பாவ்னா (33), துருபி (10), கின்ஜால் (7) மற்றும் தர்மிஷ்டா (2) என்ற 3 மகள்களுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், புதன்கிழமை தனது 3 மகள்களையும் கூர்மையான ஆயுதத்தால் அடித்து கொன்றுவிட்டு, மனைவிக்கு கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்துள்ளார், இருப்பினும் பாவ்னா கத்தியதை அடுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அங்குவந்த அக்கம்பக்கத்தினர் பாவ்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிவ்ஜியை தேடி வருவதாக மாண்ட்வி காவல் ஆய்வாளர் பி.எம் சவுதாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.