தற்போதைய செய்திகள்

வூஹானில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்

DIN

உலகில் முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

சினாவின் வூஹான் நகரம் முழுவதும் 2,842 கல்வி நிறுவனங்களில் 10.4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கரோனா தொற்றால் கடந்த ஜனவரி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து நிறுவனங்களும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வந்த அனைத்து குழந்தைகளும் முகமூடி அணிந்து வந்தனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்து வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உள்ளே அனுப்பப்பட்டனர்.

மேலும், கல்வி நிறுவனங்கள் நோய்க் கட்டுப்பாட்டு கருவிகளை போதுமான அளவு சேமித்து வைக்கவேண்டும், நாள்தோறும் சுகாதார அறிக்கையை அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டும், குழந்தைகளை தேவையில்லாமல் கூட்டமாக ஒன்று சேர்க்கக்கூடாது போன்ற விதிமுறைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வூஹானில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT