முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை முன்பு தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை முன்பு தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.  

கடந்த வாரம் ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு ஆடிப்பூர விழா நடக்கும் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிக்கப்பட்டது. 

இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள பகுதி வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோமாலியா பவன் என்ற அந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர் வியாபார நோக்கில் செயல்பட்டு அதனை மாற்றி அமைக்க முடிவு செய்தார். அதன் முதற்கட்டமாக  ஆண்டாள் கோவில் கோட்டை சுவர் ஆனது இடிக்கப்பட்டது. சுவர் இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சுவர் இடிப்பது நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று ஆண்டாள் கோவில் கோட்டைச் சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட இடம் மீட்கப்பட்டு வானமாமலை ஜீயர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →