தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை

PTI

இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்ய உள்ளதாக ஆந்திர அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் இணைய விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா கூறுகையில்,

இணைய சூதாட்டம் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறது. அதனால், இணையத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், தடை செய்யப்படும் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு முதல் தடவை அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாம் முறை விளையாடினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT