கடலூருக்கு கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
கடலூரில் புதிதாக 10 ஆம்புலன்ஸ் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்தார்.
கடலூர்: கடலூரில் புதிதாக 10 ஆம்புலன்ஸ் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்கனவே 38 இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று மாலையில் கடலூர் வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வைத்தார்.
இதனால் மாவட்டத்தில் மொத்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடியவை. மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, சென்னை போன்ற ஊர்களுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள் இந்த வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.பாண்டியன், வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.