கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்யும் விவசாயி
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று விவசாயி ஒருவர் இலவசமாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார்.
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று விவசாயி ஒருவர் இலவசமாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பலைச் சேர்ந்த விவசாயி லத்தீப் கோலாத் (வயது 51). இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற வீடுகளுக்குச் சென்று தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார்.
இதுகுறித்து கோலாத் கூறுகையில், எனது பகுதியின் சுகாதாராத் துறை அதிகாரிகள் என்னை அனுகி, எனது பண்ணை மற்றும் நெல் வயல்களில் கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான்களை கடன் கேட்டனர்.
ஆனால் பேட்டரி மூலம் இயக்கப்படும் தெளிப்பான்களை கவனமாக கையாள வேண்டியிருந்ததால் அதை நானே செய்ய முடிவு செய்தேன். தொற்றுநோய் வேகமாக பரவுவதால் ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால் இப்போது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த இரண்டு வாரங்களில், கோலாத் எடப்பலில் 35 க்கும் மேற்பட்ட வீடுகளை சுத்தம் செய்தேன். முதலில், வீடுகளை சுத்திகரிக்கும் போது நான் ஒரு ரெயின்கோட் மற்றும் ஒரு பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்தினேன். ஆனால், சில நாள்களில் ஒரு பிபிஇ உடை வாங்கினேன்.
எனது முடிவைப் பற்றி எனது மனைவியும் மகனும் ஆரம்பத்தில் தயங்கினர். ஏனெனில் என்னுடைய பாதுகாப்பிற்கு அவர்கள் அஞ்சினர். பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நான் உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் இறுதியாக ஒப்புக்கொண்டனர்.
சுகாதாரத் துறை அனைத்து ஆதரவையும் அளித்து வருகின்றனர். கிருமிநாசினிக்கு போதுமான அளவு உயர் தரமான ப்ளீச்சிங் பவுடரை அவர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பினும், அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தப் பணியைச் செய்திறேன். ஒவ்வொரு நாள் வேலைக்கு பிறகும் எனது பிபிஇ உடையையும் என்னையும் சுத்தம் செய்துக் கொள்வேன். இதற்காக தனி குளியலறை அமைத்துள்ளேன்.
மேலும் நான் 6 தெளிபான்களை வைத்துள்ளேன், இருப்பினும் இந்தப் பணிக்காக பிரத்யேகமாக ஒரு தெளிப்பானை உபயோகித்து வருகின்றேன். சிலர் எனது பணிக்கு பணம் கொடுப்பார்கள், ஆனால் அதை நான் வாங்க மறுத்துவிடுவேன் என கூறினார்.