முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் பிரணாப் முகர்ஜி, வசந்த்குமார் படங்கள் திறப்பு விழா

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் ஆகியோர் படங்களின் திறப்பு விழா இன்று நடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
ஈரோட்டில் பிரணாப் முகர்ஜி, வசந்த்குமார் படங்கள் திறப்பு விழா
பகிர்:

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் ஆகியோர் படங்களின் திறப்பு விழா இன்று நடந்தது.

ஈரோடு மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் ஆகியோர் படங்களின் திறப்பு விழா இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பிரணாப் முகர்ஜி படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். தெற்கு  மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி வசந்தகுமார் படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்   கே.இ.பிரகாஷ், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன்,  மக்கள் நீதி மைய கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்  துரை சேவுகன், ஆனந்தம் ராஜேஷ் கலந்து கொண்டனர். 

மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் சித்திக் , திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →