ஆப்கானிஸ்தான் துணை அதிபரின் பாதுகாப்பு வாகனம் மீது குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலி, 15 பேர் காயமடைதுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலி, 15 பேர் காயமடைதுள்ளனர்.
ஆப்கான் தலைநகர் காபூலின் தைமானி பகுதியில் காலை 7:30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து சலேவின் மகன் எபாத் சலேஹ் சுட்டரில் கூறுகையில்,
எங்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், எனக்கும் தந்தைக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நாங்கள் நலமாக உள்ளோம் என கூறினார்.
மேலும் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.