முகப்பு
தற்போதைய செய்திகள்

மைக்ரோசாஃப்டின் புதிய ‘ஸ்பார்டி’ மடிக்கணினி: இவ்வளவு சிறப்புகளா!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்பார்டி என்ற மலிவு விலை புதிய மடிக்கணினியை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 9 செப்டம்பர், 2020 at 5:18 PM
கோப்புப்படம்
பகிர்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்பார்டி என்ற மலிவு விலை புதிய மடிக்கணினியை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த புதிய மாதிரியில் 12.5 அங்குலம் திரை, 4 ஜி.பி. ரேம், ஐ 5 இண்டெல் கோர் ஜென் 10 செயலி, 64 ஜி.பி. சேமிப்பில் வர வாய்ப்புள்ளது.

ஸ்பார்டி மாதிரியின் அறிமுக விலை ரூ. 36800 முதல் ரூ. 44160 வரை இருக்கும் என விண்டோஸ் சென்ட்ரல் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த மடிக்கணினி விண்டோஸ் 10 எஸ் பயன்முறையில் இயங்கும். மேலும், இதில் மைக்ரோசாஃட் ஸ்டோர் பயன்பாடு மற்றும் பாதுகாப்பான இணைய சேவைக்காக எட்ஜ் ஆகியவை உபயோகிக்கப்படும்.

தற்போது, உள்ள மேற்பரப்பு மடிக்கணினி மாதிரிகளின் விலையானது  ரூ. 73,525 முதல் ரூ. 2,06,000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃட் நிறுவனம் அடுத்த மாதம் இந்த ஸ்பார்டி மாதிரியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.