முகப்பு
தற்போதைய செய்திகள்

அந்தியூரில் கரோனாவால்  உயிரிழந்தவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

அந்தியூர் அருகே கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
அந்தியூரில் கரோனாவால்  உயிரிழந்தவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
பகிர்:

பவானி: அந்தியூர் அருகே கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பாலக்குட்டையை சேர்ந்த 75 வயதான மூதாட்டி, சளி, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். கரோனா பாதிப்பாக இருக்கலாம் என மூதாட்டிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்று உறுதியான நிலையில் திடீரென மூதாட்டிக்கு புதன்கிழமை பிற்பகலில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையிலிருந்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான பாலக்குட்டை கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  இதற்கு, அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதாரத் துறையினர் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.

இதனால், பவானி நகராட்சி எரிவாயு தகன மேடையில் அடக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பராமரிப்பு பணி நடைபெறுவதால் தகனம் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தியூர் பெரியஏரி கரையோரத்தில் உள்ள மயானத்தில் மூதாட்டியின் சடலம் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. அந்தியூரில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் சடலம் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →