முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் ஒரு மாத பேத்தியைக் கொன்ற பெண் கைது

ஹரியாணாவில் தனது ஒரு மாத பேத்தியை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
ஹரியாணாவில் ஒரு மாத பேத்தியை கொன்ற பெண் கைது
பகிர்:

ஹரியாணாவில் தனது ஒரு மாத பேத்தியை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனர்.

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் லட்சுமி (வயது 58) என்ற பெண் தனது மகன்-மருமகளுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமேன நினைத்து ஒரு மாத பெண் குழந்தையை செப்டிக் டேங்கில் வீசி கொன்றுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்,

லட்சுமி என்ற பெண்ணின் மகன்-மருமகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. அதில், ஒரு குழந்தை காணவில்லை என கடந்த வாரம் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் பாட்டியே செப்டிக் டேங்கில் வீசி கொன்றது தெரியவந்தது.

பின், விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட பெண், தனது மகன்-மருமகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கு மேல் குழந்தை வேணாம் என கருத்தடை செய்ய இருந்தனர். மூன்றாவது குழந்தையை கொன்றால் அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்து செப்டம்பர் 3 அன்று இரவு செப்டிக் டேங்கில் வீசி கொன்றதாக வாக்குமூலம் அளித்தார் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →